நாகர்கோவில் அருகே கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை. குழந்தைகள் பரிதவிப்பு

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள கரியப்பட்டணம் கடற்கரை கிராமத்தை சேர்ந்தவர் ஷாமிலி.இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஆரோக்கிய சூசநாதன் என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு தொடர்பு இருந்து வந்தது. இந்நிலையில் ஷாமிலிக்கு அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவருடன் திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதேபோன்று ஆரோக்கியசூசை நாதனுக்கும் திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரியை சேர்ந்த வில்சா என்ற பெண்ணுக்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இருப்பினும் ஷாமிலி சூசை நாதனுடன் உள்ள தொடர்பை துண்டிக்காததால் வெல்சா கணவனை பிரிந்து தனது பெற்றோருடன் வாழ்ந்து வருகிறார்.இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் ஷாமிலி திடீரெனமாயமானதாக அவரது கணவர் மணவாளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இது குறித்த போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் இன்று காலை நாகர்கோவில் அருகே உள்ள ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் பகுதியில் காரில் விஷம் குடித்து இருவரும் தற்கொலை செய்து கொண்டனர். இதனால் ஷாமிலியின் குழந்தைகள் ஆதரவின்றி தவித்து வருகிறது:இந்த சம்பவம் குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :