லஞ்சம் வாங்கிய பெண் எஸ்எஸ்ஐ

by Staff / 29-03-2023 11:05:42am
லஞ்சம் வாங்கிய பெண் எஸ்எஸ்ஐ

ஹரியானாவில் பெண் எஸ்எஸ்ஐ ஒருவர் லஞ்சம் வாங்கி கேமரா மூலம் சிக்கிய சம்பவம் நடந்துள்ளது. பிவானி மாவட்டம் பவானிகேடா காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் சப்-இன்ஸ்பெக்டர் முன்னி தேவி என்பவர், ஸ்டேஷனுக்கு வந்தவர்களிடம் லஞ்சம் கேட்டுள்ளார். புகார் அளிக்க வருபவர்களிடம் பணம் கேட்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். இந்த நிலையில், புகார் தாரர்களிடம் இருந்து ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்குவது கேமராவில் பதிவானது. அதிகாரிகளிடம் பிடிபட்டவுடன் எஸ்ஐ மிகவும் பயந்து நடுங்குவதை வீடியோவில் காணலாம். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

 

Tags :

Share via

More stories