இன்று மூன்று மணி அளவில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம்.
இன்று மதியம் 3 மணி அளவில் சென்னை பனையூரில் அமைந்துள்ள தமிழக வெற்றிக்கழக கட்சி தலைமை அலுவலகத்தில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட செயலாளர்கள் பங்கேற்கும் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டம் கட்சியின் பொதுச் செயலாளரும் ஊரகத்துறை அமைச்சருமான புஸ்சி என்.ஆனந்த் தலைமையில் நடைபெற உள்ளது. கட்சியின் அடுத்த கட்ட வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகவும் மாவட்ட வாரியாக கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தவும், வரும் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ளும் முகமாக ஆற்றிட வேண்டிய ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்படலாம். . தமிழக வெற்றி கழக தலைவரும் தமிழக முதலமைச்சருமான விஜய் டெல்லியில் உள்ள நிலையில் கட்சியின் இந்த அவசரக்கூட்டம் நிகழ உள்ளது.
Tags :


















