வன்முறை எதிரொலி :மணிப்பூரில் நீட் தேர்வு ஒத்திவைப்பு
வன்முறை வெடித்த மணிப்பூர் மாநிலத்தில் நீட் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டு இருந்த மாணவர்களுக்கு மட்டும் நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.மணிப்பூரில் சுமார் 5 ஆயிரத்து 751 மாணவர்கள் தேர்வு எழுத 2 மையங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில், அசாதாரண சூழலால் மாணவர்களின் நலன் கருதி தேர்வை ஒத்திவைக்க மத்திய இணையமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் பரிந்துரைத்தார். அதன் அடிப்படையில், மணிப்பூரில் மட்டும் நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Tags :