மகளிர் உரிமை தொகை திட்டம் குறித்து முதற்கட்டமாக மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் எந்த ஒரு தகுதியான பயனாளியும் விடுபட்டு விடக்கூடாது என்று கண்காணிப்பு அலுலர்களுக்கு அறிவுறுத்திய தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா, நாளை புதன்கிழமை முதற்கட்டமாக மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு நடத்த உத்தரவிட்டுள்ளார். ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ வழங்கும் திட்டம் அண்ணா பிறந்தநாளான செப். 15ஆம் தேதி தொடங்கப்படுகிறது. இதற்காக விண்ணப்பங்களைப் பதிவு செய்தல், முகாம்களில் அடிப்படை வசதிகள், விண்ணப்பதாரர் காத்திருக்கும் அறைகள், பயோமெட்ரிக் சாதனங்களைப் பெற்று சரிபார்த்தல் பகிர்ந்தளித்தல், விண்ணப்பங்கள் பெறுதல் சரிபார்த்தல் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து நாளை முதல் ஆய்வு நடக்கும்.
Tags :