தில்லியில் குடியரசுத் தலைவருக்கு  அறுவைச் சிகிச்சை

by Editor / 19-08-2021 05:12:35pm
தில்லியில் குடியரசுத் தலைவருக்கு  அறுவைச் சிகிச்சை



தில்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு  அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து குடியரசுத் தலைவரின் செய்தித் தொடர்பு செயலாளர் அஜய் குமார் சிங் கூறியது:
"தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு இன்று காலை கண்புரை நீக்க அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.மேலும், சிகிச்சை முடிவடைந்ததை குடியரசுத் தலைவர் நலமுடன் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்."


முன்னதாக கடந்த மார்ச் 30ஆம் தேதி குடியரசுத் தலைவருக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது 

 

Tags :

Share via

More stories