மதுரை சித்திரைத் திருவிழா-மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு.

மதுரை சித்திரைத் திருவிழாவுக்காக வைகை அணையில் இருந்து வரும் மே 8ம் தேதியில் இருந்து 5 நாட்களுக்கு விநாடிக்கு 1000 கன அடி தண்ணீர் திறக்க நடவடிக்கை. மே 12ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு நடக்க உள்ளது.
மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று சித்திரைத் திருவிழா குறித்து ஆலோசனைக் கூட்டம் நடந்துள்ளது. இந்தாண்டு மீனாட்சி திருக்கல்யாணத்தைக் காண 13,600 பேருக்கு அனுமதி வழங்கப்பட உள்ளதாக தெரிவிப்பு
மேலும், கடந்தாண்டு மாநகராட்சியின் மின்சாரத்தை பயன்படுத்தியதற்கு ரூ.1 கோடி கட்டணத்தை கோயில் நிர்வாகம் அளிக்காததால், இந்தாண்டு மின்வாரியம் மூலம் வேறு ஏற்பாடுகள் செய்துகொள்ள மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு.
Tags : மதுரை சித்திரைத் திருவிழா-மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு.