மேகாலயாவில் ஆற்றில் பஸ் கவிழ்ந்தது: 6 பேர் பலி

by Editor / 30-09-2021 03:29:00pm
மேகாலயாவில் ஆற்றில் பஸ் கவிழ்ந்தது: 6 பேர் பலி

பஸ் ஆற்றில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலியானார்கள். 16 பேர் படுகாயமடைந்தார்கள். இருவரைக் காணவில்லை. இந்த விபத்து புதன்  நள்ளிரவு மேகாலயாவில் நடந்தது.


மேகலாலய மாநிலம் துரா என்ற பகுதியில் இருந்து தலைநகர் ஷில்லாங் பகுதிக்குச் சென்ற பஸ் ரிங்டி என்ற ஆற்றில் கவிழ்ந்து விழுந்தது. நோங்சரம் என்ற பகுதியில் இந்த விபத்து நடந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.


ரோங்ஜெங், வில்லியம் நகர் பகுதி தீயணைப்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். இதில் 6 பேர் பிணமாக மீட்கப்பட்டுள்ளனர். துரா பகுதியைச் சேர்ந்த 9 பேரும் வில்லியம் நகர் பகுதியைச் சேர்ந்த 12 பேரும் இதில் பயணித்ததாக போலீசார் தெரிவித்தனர். 2 பேரைக் காணோம். 16 பேர் படுகாயமடைந்தனர்.

 

Tags :

Share via

More stories