சிங்கப்பெண் படையை அமைத்து விட்டேன் என்று சவாலும் சவடாலும் விடும் முதலமைச்சர் - தி.மு.கதலைவர்மு .க .ஸ்டாலின்
தமிழக முன்னாள் முதலமைச்சரும் திமுக கழக தலைவருமான மு .க .ஸ்டாலின் தம் எக்ஸ் வலைதளத்தில் தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து ,எப்பொழுது சைலண்ட் மோடில் இருந்து வெளியே வருவீர்கள் என்று கேட்டுள்ளார். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைமை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ள அவர், கும்முடிபூண்டியில் மூன்று வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரத்திற்கு பிறகும் திறமையான அதிகாரிகளை நியமித்துவிட்டு சிங்கப்பெண் படையை அமைத்து விட்டேன் என்று சவாலும் சவடாலும் விடும் முதலமைச்சர் இன்னும் மௌனமாக இருப்பது ஏன்? என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளதோடு மக்களின் பாதுகாப்பு பிரச்சனைகளுக்கு முதலமைச்சர் எப்பொழுது கால்ஷீட் கொடுப்பார் என்றும் குற்றவாளிகள் அச்சமின்றி செயல்படுவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் புதிய அரசு பொறுப்பேற்றதால் ஆறு மாதங்களுக்கு எதையும் கேட்கக்கூடாது என்று நினைத்தீர்களா? அல்லது திமுகவின் பெரும் போராட்டத்தை எதிர்பார்க்கிறீர்களா? என்றும் அரசின் கவனம் மக்களின் மீது இருக்க வேண்டும் என்பதற்கான கருத்தை பதிவிட்டுள்ளார்.
Tags :


















