கொளத்தூர் தொகுதி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரசரிபார்க்கப்பட்ட எட்டு இயந்திரங்களில் 3 இயந்திரங்கள் தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக குளறுபடி

by Admin / 02-08-2026 01:25:28am
கொளத்தூர் தொகுதி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரசரிபார்க்கப்பட்ட எட்டு இயந்திரங்களில் 3 இயந்திரங்கள் தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக குளறுபடி

கொளத்தூர் தொகுதியில் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட திமுக தலைவர் மு க ஸ்டாலின் தேர்தல் ஆணையத்திடம் வைத்த கோரிக்கையின் பெயரில் சிந்தாதிரிப்பேட்டை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி ஜூலை 29 முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதுவரை சரிபார்க்கப்பட்ட எட்டு இயந்திரங்களில் 3 இயந்திரங்கள் தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக குளறுபடி உள்ளதாக என் ஆர் இளங்கோவன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். வாக்குப்பதிவு முடிந்து சீல் வைக்கப்பட்ட இயந்திரங்களில் இருக்க வேண்டிய பழைய முகவரி அட்டைகளுக்கு பதிலாக புதிதாக எழுதப்பட்ட அட்ரஸ் டேக்குகள் மாற்றப்பட்டு இருக்கிறது என்றும் கட்டுப்பாட்டு இயந்திரங்களில் இருக்க வேண்டிய முறையான இரட்டை அரக்கு சீல்கள் இல்லை என்றும் சில இயந்திரங்களில் சீர்கள் தவறான இடங்களில் பதிப்பிக்கப்பட்டு இருப்பதாகவும் இந்த ஆதாரங்களின் அடிப்படையில் குளத்தூர் தொகுதியில் தேர்தல் நியாயமாக நடைபெறவில்லை என்கிற சந்தேகம் வலுத்து உள்ளதாகவும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக பராமரிக்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படும் மனித தவறு என்ற விளக்கத்தை ஏற்க முடியாது என்றும் சரிபார்ப்பு பணியில் இருந்து திமுக வெளிய நடப்பு செய்தது. முழுமையாக சரி பார்க்கும் பணி முடிந்து சான்றளிக்கப்பட்ட வீடியோ பதிவுகளின் அடிப்படையில் சட்டப்பூர்வ ஆதாரங்களுடன் சென்னை உயர்நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் தெரிவித்தார். இது குறித்து சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் சமீரன் இதுவரை சரிபார்க்கப்பட்ட இயந்திரங்களில் எந்தவித தவறுகளும் நடைபெறவில்லை என்று விளக்கம் அளித்தார்.

 

Tags :

Share via
Logo