கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட நபர்களுக்கு சிறைத்தண்டனை
திண்டுக்கல் மாவட்டம் பேகம்பூர் நத்தர்சா பகுதியைச் சேர்ந்த சகோதரர்களான 1. முகமது ஜியாவுதீன் (53), த.பெ. அப்துல ஹமீது, 2. நிஸ்தார் அகமது (55), த.பெ. அப்துல் ஹமீது ஆகியோர்கள் சொத்து பிரச்சினை காரணமாக கடந்த 10.11.2022-ம் தேதி தங்களது பக்கத்து வீட்டைச் சேர்ந்த பயாஸ் அகமது என்பவரை கத்தியால் தாக்கி கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காக திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.. இவ்வழக்கானது, திண்டுக்கல் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் முகமது ஜியாவுதீன் (53), என்பவருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் மற்றும் ரூ.1,500/- அபராதமும் 2. நிஸ்தார் அகமது (55) | என்பவருக்கு 3 வாரங்கள் சிறைத்தண்டனையும் ரூ. 500/- அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
Tags :



















