வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் இன்று தொடங்குகின்றன.:

by Admin / 04-11-2025 05:21:12am
வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் இன்று தொடங்குகின்றன.:

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு உட்பட 10 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள்இன்று தொடங்குகின்றன.:வீடுதோறும் கணக்கெடுப்பு: வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புக்காக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் இன்று முதல் டிசம்பர் 4, 2025 வரை வீடுதோறும் சென்று கணக்கெடுப்பு நடத்துவார்கள்.திருத்தப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 9, 2025 அன்று வெளியிடப்படும்..வரைவுப் பட்டியல் மீதான கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளை டிசம்பர் 9, 2025 முதல் ஜனவரி 8, 2026 வரை தெரிவிக்கலாம்.அனைத்து திருத்தங்களுக்கும் பிறகு, இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7, 2026 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.. இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தற்போதுள்ள வாக்காளர்கள் தங்கள் பெயர்களைப் பட்டியலில் தக்கவைத்துக் கொள்ள, பூர்த்தி செய்யப்பட்ட விவரங்கள் அடங்கிய படிவங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். .இந்தத் திருத்தப் பணிகளை  தி.மு.க உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள் எதிர்த்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.. 

வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் இன்று தொடங்குகின்றன.:
 

Tags :

Share via