4 வழி சாலையாக மாற்றப்படும்- தேவஸ்தான அதிகாரி தகவல்

by Admin / 26-12-2021 05:32:10pm
4 வழி சாலையாக மாற்றப்படும்- தேவஸ்தான அதிகாரி தகவல்


பலத்த மழையால் சேதமடைந்த மலைப்பாதை மற்றும் ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை பணியை விரைந்து முடிக்க வேண்டும். அலிபிரியில் இருந்து திருமலைக்கு செல்லும் சேதமடைந்த மலைப்பாதை குறித்து தனியார் நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்வதற்காக நாடு முழுவதும் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.

வெளியூர் மற்றும் வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் கார், வேன் மூலம் திருப்பதிக்கு வருகின்றனர். வேகமாக வரும் வாகனங்களால் மலைப்பாதையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது.

விபத்துக்களை தடுக்கும் பொருட்டு அலிபிரி சோதனைச் சாவடியில் வாகனங்கள் நேரம் குறிக்கப்பட்டு மலைப்பாதையில் அனுமதிக்கப்படுகின்றன.

மலைப் பாதையில் வேகமாக சென்று குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாக திருமலைக்கு வரும் வாகனங்கள் ஸ்பீடுகன் மூலம் கண்டறியப்பட்டு வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்த நிலையில் பலத்த மழையால் சேதமடைந்த மலைப்பாதையை சீரமைப்பது குறித்து தேவஸ்தான செயல் அலுவலர் ஜவகர் ரெட்டி நேற்று தேவஸ்தான அதிகாரிகள், என்ஜினியர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

பலத்த மழையால் சேதமடைந்த மலைப்பாதை மற்றும் ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை பணியை விரைந்து முடிக்க வேண்டும். அலிபிரியில் இருந்து திருமலைக்கு செல்லும் சேதமடைந்த மலைப்பாதை குறித்து தனியார் நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது. அவர்கள் ஜனவரி 10-ந்தேதிக்குள் ஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளனர்.

அதன் பின்னர் அமிர்தா பல்கலைக் கழகத்துடன் அந்த ஆய்வறிக்கை ஒப்படைக்கப்படுகிறது அவர்கள் அறிவுறுத்தலின் பேரில் திருமலையிலிருந்து அலிப்பிரிக்கு வரும் சாலையை 4 வழி சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மொகாலிமெட்டிலிருந்து சிஎன்சி வரை 4 வழி சாலையாக விரிவுபடுத்த ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவித்தார்.

 

Tags :

Share via