ஜனவரி 3ஆம் தேதி முதல் 6 – 12ஆம் வகுப்புகளுக்கு சுழற்சி முறை ரத்து

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. ஆனால் உருமாறிய ஒமைக்ரான் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் வரும் 15 ஆம் தேதியுடன் தமிழகத்தில் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு விதிமுறைகளை அதிகரிப்பாத்தா..தளர்வுகளை அறிவிப்பதா என்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து தமிழ்நாட்டில் தளர்வுகளுடனான ஊரடங்கு வரும் 31ம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதில் சில கட்டுப்பாடுகளும், தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜனவரி 3ஆம் தேதி முதல் 6 – 12ஆம் வகுப்புகளுக்கு சுழற்சி முறை ரத்து செய்யப்படுவதாகவும், வழக்கம்போல் 6 – 12 ஆம் வகுப்புக்களுக்கு தினமும் பள்ளிகள் இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
Tags :