அஜித்குமார் உயிரிழந்த வழக்கில் வீடியோ எடுத்த இளைஞரிடம் விசாரணை

சிவகங்கை அருகே மடப்புரத்தில் போலீஸ் விசாரணையில் அஜித்குமார் உயிரிழந்த வழக்கில், நீதிபதி ஜான் சுந்தர்லால் திருப்புவனத்தில் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார். இன்று காலை காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்ட நிலையில், தற்போது போலீசார் தாக்கும் வீடியோவை பதிவு செய்த சக்தீஸ்வரனிடம் நீதிபதி விசாரணையை மேற்கொண்டுள்ளார். இதையடுத்து அஜித்குமார் தாக்கப்பட்ட இடம் மற்றும் அவரது வீட்டிற்கும் சென்று விசாரணை நடத்த உள்ளார்.
Tags :