சாரி கேட்பது நியாயமா? - நயினார் நாகேந்திரன் கேள்வி

காவலர்களால் படுகொலை செய்யப்பட்ட இளைஞர் அஜித் குமாரின் தாயிடம் "சாரி மா" என்று சொல்வது எந்த வகையில் நியாயமாகும்? இதுபோன்ற மரணங்கள் நிகழாமல் தடுப்பது தானே காவல் துறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வரின் கடமை என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியிருக்கிறார். சிவகங்கை இளைஞர் அஜித் குமார் போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்ததைத்தொடர்ந்து, முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று (ஜூலை 1) இளைஞரின் குடும்பத்தினரிடம் போனில் ஆறுதல் தெரிவித்தார். இதனை பாஜக தலைவர் விமர்சித்து X பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Tags :