ரூ.10 லட்சம் வேண்டும்.. உடலை வாங்க மறுத்து போராட்டம்

by Editor / 02-07-2025 02:11:47pm
ரூ.10 லட்சம் வேண்டும்.. உடலை வாங்க மறுத்து போராட்டம்


சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் ஆலை நிர்வாகம் சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்க வலியுறுத்தி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆலை சார்பில் ரூ.5 லட்சம் கொடுப்பது வழக்கமாக உள்ள நிலையில், ரூ.10 லட்சம் வழங்கும் வரை உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.4 லட்சம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது

 

Tags :

Share via