கலைஞர் நூலகத்தை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

by Editor / 24-07-2024 09:26:54am
கலைஞர் நூலகத்தை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் கடைவீதியில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் அமைக்கப்பட்ட கலைஞர் நூலகத்தை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். புதிதாக அமைக்கப்பட்ட கலைஞர் நூலகத்தில் அகநானூறு, புறநானூறு, கம்பராமாயணம், உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் பொதுமக்கள் படித்து பயன்பெறும் நோக்கில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நூலகத்தை திறந்து வைத்த பின்னர் ஏராளமான பொதுமக்கள் வருகை தந்து நூல்களை வாசித்து வருகின்றனர். திருமயம் கடைவீதியில் மையப்பகுதியில் அரிய வகை நூல்கள் இருப்பதால்  பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என தெரிவித்தனர்.
 

 

Tags : கலைஞர் நூலகத்தை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

Share via

More stories