திருமங்கலம் அருகே சடலத்துடன் மறியல்

by Staff / 04-08-2024 05:10:08pm
திருமங்கலம் அருகே சடலத்துடன் மறியல்

திருமங்கலம்: மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா அருகே பொன்னமங்கலம் கிராமத்தில் இறந்த தலித் ஒருவரின் சடலத்தை தங்கள் தெருவின் வழியாக கொண்டு செல்லக்கூடாது என்று ஆறுமுகம் என்பவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த மக்கள் இறந்து போனவர் உடலை ஆறுமுகம் வீட்டு வாசல் கிடத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்தனர்.பின்னர் இறந்தவரின் உறவினர்களுடன் போலீசாருடன் பேச்சு வார்த்தை நடத்தி சடலத்தை எடுத்தனர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

Tags :

Share via