பல லட்சம் மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் - மாணவர் அமைப்பின் தலைவர் கைது.

தமிழக-கேரள எல்லை பகுதியான கேரள மாநிலம், புனலூர் பகுதியில் சில இளைஞர்கள் நமது நாட்டில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களான எம்.டி.எம்.ஏ என்கின்ற போதை பொருட்களை இளைஞர்களிடம் விற்பனை செய்து வருவதாக கேரளா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதன் அடிப்படையில், புனலூர் அருகே உள்ள தலச்சிரா என்கின்ற பகுதியில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்ட போது, அந்த பகுதியில் முகாமிட்டிருந்த இளைஞர்களிடம் போலீசார் விசாரணை நடத்த முயற்சி செய்துள்ளனர்.
அப்போது, போலீசாரை பார்த்த அந்த இளைஞர்கள் தப்பி ஓடவே, விரட்டிச் சென்ற போலீசார் அதில் ஒரு நபரை மட்டும் பிடித்த நிலையில், மற்ற 3 நபர்கள் தப்பியுள்ளனர்.
இந்த நிலையில், பிடிபட்ட நபரிடம் நடத்திய விசாரணையில் அந்த நபர் புனலூர் பகுதியை சேர்ந்த முஹ்சின் என்பதும், அவர் அந்த பகுதியில் எஸ்.எப்.ஐ என்ற மாணவர் அமைப்பின் தலைவராக இருப்பதும் தெரிய வரவே, அந்த நபரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த சுமார் 20 கிராம் எடையுள்ள பல லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட எம்.டி.எம்.ஏ என்கின்ற போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்த நிலையில், தப்பி ஓடிய அவரது கூட்டாளிகளை வலை வீசி தேடி வருகின்றனர்.
Tags : பல லட்சம் மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் - மாணவர் அமைப்பின் தலைவர் கைது.