ஊரடங்கு கட்டுப்பாடு.. மத்திய அரசு அறிவிப்பு

கொரோனாவின் இரண்டாவது அலையின் தொடக்கத்தில் உச்சத்தில் இருந்த கொரோனா தொற்று தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனால், கேரளாவில் மட்டும் கொரோனா தொற்று குறையவில்லை.
கேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரமாக 30 ஆயிரத்திற்கு மேல் பதிவாகி வருகிறது. கேரளாவில் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைv அமல்படுத்த தயங்குவதே தொற்று அதிகரிக்க காரணம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 85 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளிலேயே தனிமையில் இருக்கும் நிலையில், அந்த பகுதிகளை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்க வேண்டிய தேவை இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.கட்டுப்பாட்டு பகுதிகளை அதிகரித்து, ஊரடங்கு அமல் படுத்த வேண்டும். குறிப்பாக பண்டிகை காலங்களில் இவற்றை கட்டாயமாக்க வேண்டும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Tags :