சாலை விபத்தில் நூலிழையில் உயிர் தப்பிய பெண்

by Staff / 21-05-2023 12:24:39pm
சாலை விபத்தில் நூலிழையில் உயிர் தப்பிய பெண்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெண் ஒருவர் சாலை விபத்தில் நூலிழையில் உயிர் பிழைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் கணேஷ்புரி மெயின் கட்டா சாலையில் இளைஞருடன் பெண் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த ஜேசிபி அருகே வேகமாக சென்ற பைக் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தது. இதில் அப்பெண் ஜேசிபி டயர் அருகே விழுந்தார். ஆனால், நூலிழையில் விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via

More stories