அரசன் படம் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது
வேல்ஸ் பட நிறுவனத்திற்கு "கொரோனா குமார்" என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி முன்பணம் பெற்றிருந்தார் ஆனால், அந்தப் படத்தில் நடிக்காமல் இழுத்தடித்ததாகக் கூறி தயாரிப்பாளர் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நடிகர் சிம்பு அதனை தவிர்த்து அரசன் படத்திற்கு கால் சீட் கொடுத்து நடித்துக் கொண்டிருப்பதற்கு எதிராக தயாரிப்பாளரால் வழக்கு தொடுக்கப்பட்டது. அதன் காரணமாக அரசன் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வேல்ஸ் நிறுவனத்திடம் வாங்கிய பணத்தை சிம்பு தரப்பில் கொடுக்கஒத்துக்கொண்டதால் அரசன் படம் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வெற்றிமாறன் இப்படத்தை இயக்கி வருகிறார்.
Tags :













.jpg)




