எந்த ஒரு நாட்டுக்கும் சமூகத்துக்கும் அச்சுறுத்தலாக இருக்காது பிரதமர் மோடி

by Staff / 22-04-2022 12:48:15pm
எந்த ஒரு நாட்டுக்கும் சமூகத்துக்கும் அச்சுறுத்தலாக இருக்காது பிரதமர் மோடி

இந்தியா எந்த ஒரு நாட்டுக்கும் சமூகத்துக்கும் அச்சுறுத்தலாக இருக்கிறது என்றும்  செங்கோட்டையில் ஆற்றிய உரையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சீக்கிய குருக்களின் புனிதமான தியாகங்களால் இன்று நாம் சுதந்திரமாக முடிவெடுக்கக் கூடிய நாடாக இருப்பதாகவும் மோடி புகழாரம் சூட்டினார். குரு தேஜ்பகதூர் இன் 400வது ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் நேற்று இரவு பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார்கள். குருக்கள் காட்டிய பாதையில் இந்தியா இன்று வெற்றி நடை போடுவதாகவும் அதற்கு மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். இதே செங்கோட்டையில் ஓளராங்கசிப்பை   சிரச்சேதம் செய்யப்பட்ட குரு தேஜ் பகதூர் இன் உயிர் தியாகத்தை மோடி நினைவுகூர்ந்தார். பல தலைமுறைகளை சித்தரவதை செய்த கொடியவன் ஓளராங்கசிப்பை துணிவுடன் எதிர்த்து நின்று நாட்டுக்கு உந்து சக்தியாக விளங்கிய மாவீரன் குரு தேஜ்பகதூர் என்று மோடி குறிப்பிட்டார். இந்தியாவில் எந்த நாட்டுக்கும் அச்சுறுத்தல் இல்லை என்றும் இன்று இந்தியா உலகத்திற்கே உதவுகிற நாடாக இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார். குரு தேஜ்பகதூர் நினைவாக அவரது உருவச் சின்னம் பதித்த400 ரூபாய் சிறப்பு நாணய தபால்தலை போன்றவற்றை பிரதமர் மோடி வெளியிட்டார்.

 

Tags :

Share via

More stories