த.மா.கா. வேட்பாளர்கள் அறிவிப்பு

by Staff / 22-03-2024 12:38:06pm
த.மா.கா. வேட்பாளர்கள் அறிவிப்பு

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வி.என்.வேணுகோபால், ஈரோடு தொகுதியில் பி.விஜயகுமார், தூத்துக்குடி தொகுதி வேட்பாளர் யார் என நாளை மறுநாள் அறிவிப்பதாக தெரிவித்துள்ளார். பாஜக கூட்டணியில் இணைந்துள்ள த.மா.கவுக்கு 3 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் சைக்கிள் சின்னத்தில் அக்கட்சி போட்டியிட உள்ளது. கடந்த முறை அதிமுக கூட்டணியில் இருந்த ஜி.கே.வாசன், கூட்டணியை முறித்துக் கொண்டு பாஜகவுடன் கை கோர்த்துள்ளார்.

 

Tags :

Share via