கின்னஸ் சாதனையில் இடம்பிடிக்க 12 லட்சம் விளக்குகள்

by Staff / 18-10-2022 05:32:44pm
கின்னஸ் சாதனையில் இடம்பிடிக்க 12 லட்சம் விளக்குகள்


ஆண்டுதோறும் தீபாவளிக்கு முன்னதாக, உத்தரபிரதேசம் அயோத்தியில் உள்ள ராம் கி பைடி காட்ஸில் தீபோத்ஸவ் கொண்டாடப்படுவது வழக்கம். கோவில் குளக்கரைகளில் லட்சக் கணக்கான விளக்குகளை பொதுமக்கள் வைப்பார்கள். இந்த வருடம் அக்டோபர் 23ம் தேதி ஆறாவது தீபோத்ஸவ் கொண்டாட வேண்டி உத்தரப்பிரதேச அரசு முழு வீச்சில் ஏற்பாடுகள் செய்து வருகிறது. கடந்த ஐந்து வருடங்கள் இல்லாத அளவிற்கு கின்னஸ் சாதனை படைக்க 12 லட்சத்திற்கும் மேற்பட்ட விளக்குகளை ஏற்றி வைக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 30 நிமிடங்களுக்கு மேல் விளக்குகள் எரியும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் இந்த வருடம் மக்கள் நீண்ட நேரம் விளக்குகள் எரிவதைக் காணலாம்.

 

Tags :

Share via

More stories

Logo