இடைக்கால பட்ஜெட்டை சொத்தையான அத்திப்பழம் -அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பட்ஜெட்டை சொத்தையான அத்திப்பழம் என்று விமர்சனம் செய்தார். அத்திப்பழம் வெளியே பார்க்க அழகாக இருந்தாலும் உள்ளே புழுக்கள் இருப்பது போல இந்த பட்ஜெட் பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருந்தாலும் உருப்படியாக ஏதும் இல்லை என்றும் கடந்த ஆண்டுகளைப் போலவே இதுவும் வெறும் வார்த்தை ஜாலங்கள் நிறைந்த மேனாமணிக்கு உரை என்றும் இதில் மக்களுக்கு பயன்பெறும் திட்டங்கள் ஏதும் இல்லை என்றும் குற்றம் சாட்டினார். சட்டமன்றத்தில் பட்ஜெட் உரை நடந்து கொண்டிருக்கும் பொழுது அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் காது குத்தும் விழா என்று ஒரு அழைப்புகளை அடித்து அனைவருக்கும் தெரியும் வாரியாக காட்டியவாறு அரசு மக்களை ஏமாற்றுவதாக கூறி சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர் தமிழக அரசின் கடன் சுமை அதிகரித்து இருப்பதை சுட்டிக்காட்டிய அவர் தேர்தல் நேரத்தில் மக்களை திசை திருப்பும் முயற்சியே இந்த பட்ஜெட் என்றும் தெரிவித்துள்ளார்.
Tags :



















