இந்தியாவின் முதல் தனியார் துறை ஹெலிகாப்டர் அசெம்பிளி லைன் ஏர்பஸ் ஹெலிகாப்டர் நிறுவனங்கள்
இந்தியாவின் முதல் தனியார் துறை ஹெலிகாப்டர் அசெம்பிளி லைன் அதிகாரப்பூர்வமாக கர்நாடகாவின் கோலார் மாவட்டம் வெம். கலில் தொடங்கப்பட்டது. இந்த ஆலையை டாட்டா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் மற்றும் ஏர்பஸ் ஹெலிகாப்டர் ஆகிய நிறுவனங்கள் இணைந்து அமைத்துள்ளன. இங்கு ஏற்பட்டின் புகழ்பெற்ற ஹெச் ஒன் 25 சிங்கிள் இஞ்சின் ஹெலிகாப்டர்கள் தயாரிக்கும் இது உலகிலேயே அதிகமாக விற்பனையாகும் ஹெலிகாப்டர் வகையைச் சார்ந்ததாகும் .இந்தத் திட்டத்திற்காக சுமார் ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் அடுத்த 20 ஆண்டுகளில் சுமார் 500 ஹெலிகாப்டர்களை உற்பத்தி செய்ய இலக்க நிர்ணிக்கப்பட்டுள்ளதாகவும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ஹெச் 125 ஹெலிகாப்டர் 2027 தொடக்கத்தில் வெளிவரும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. பிரஞ்சு அதிபர் இம்மானுவேல் மெக்ரானின் இந்திய வருகையின் போது இந்த ஹெலிகாப்டர் ஆலை மட்டும் இன்றி மற்ற பாதுகாப்பு ஒப்பந்தங்களும் முன்னெடுக்கப்பட்டன. ரஃபேல் போர் விமானங்களுக்கு தேவையான எம்82 இன்ஜின்களை இந்தியாவிலே அசெம்பிள் செய்ய பிரான்சின் சப்ரான் நிறுவனம் முன் வந்துள்ளது. புதிய ரஃபேல்ப்பில் ஒப்பந்தங்களின் கீழ் தொழில்நுட்ப பகிர்வு மூலம் 55 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை உள்நாட்டு பாகங்களை பயன்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முன்னேற்றங்கள் இந்தியாவின் மேக் இன் இந்தியா மற்றும் ஆத்ம நிர்பர் பாரத் திட்டங்களுக்கு பெரிய ஒன்றுதலாக அமைந்துள்ளன.
Tags :



















