புதுடில்லியில் இந்தியா ஏ ஐ இன்ஃபாக்ட் உச்சி மாநாட்டில்...
புதுடில்லியில் இந்தியா ஏ ஐ இன்ஃபாக்ட் உச்சி மாநாட்டில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மன்னிப்பு கேட்டுள்ளார். பாரத் மண்டபத்தில் தொடங்கிய இந்த மாநாட்டில் எதிர்பார்த்ததை விட எழுபதாயிரம் பேர் கலந்து கொண்டதால் நுழைவு வாயிலில் பல மணி நேரம் மக்கள் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியது. தெளிவற்ற வழிகாட்டுதல்கள், பதிவு செய்வதில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் இணைய இணைப்பு சிக்கல்கள் போன்றவற்றை பங்கேற்பாளர்கள் எதிர்கொண்டனர். பிரதமரின் வருகைக்காக பாதுகாப்பு காரணங்களால் சில கண்காட்சி அரங்குகள் தற்காலிகமாக மூடப்பட்டதாகவும் வெளிநாட்டு பிரதிநிதிகள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனர்கள் வெளியேற்றப்பட்டதாக புகார் எழுந்துள்ளன. அத்துடன் சில அரங்குகளின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் திருடு போனதும் வருத்தத்தை அளித்தன.. இந்த குறைபாடுகளை சரி செய்யவும் மீதமுள்ள நாட்களுக்கு சுமுகமான அனுபவத்தை வழங்கும் சிறப்பு அறையை அமைத்துள்ளதாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். கருத்துக்களை உடனுக்குடன் கேட்டு அவற்றை தீர்க்க ஒரு குழு செயல்பட்டு வருவதாகவும் இரண்டாம் நாளில் நிலைமை ஓரளவு சீரடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Tags :



















