ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையம் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம்.

by Editor / 03-02-2025 07:55:55am
ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையம் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம்.

ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையம் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (பிப். 02) இரவு முகமூடி அணிந்து வந்த 2 மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பியோடிய நிலையில் மாவட்டத்தின் பல பகுதிகளை சேர்ந்த போலீசார் காவல் நிலைய எல்லைக்கு வருகை தந்துள்ளனர். பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடக்கிறது.அதன்பேரில் உயர் அதிகாரிகள் காவல் நிலையத்திற்கு வந்து சோதனை நடத்தினர். தொடர்ந்து காவல் நிலையம் முன்பு உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் முகமூடி அணிந்தபடி வந்த இரண்டு பேர் தான் காவல் நிலையம் முன்பு பெட்ரோல் குண்டு வீசிய காட்சிகள் பதிவாகியிருந்தது. சிசிடிவி காட்சிகளை வைத்து அவர்கள் இருவரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

 

Tags : ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையம் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம்

Share via

More stories