பாரத் ஜோடா யாத்திரையை காங்கிரஸ் கட்சி முழுமையாக நம்பி கொண்டிருக்கின்றது.

by Admin / 15-01-2024 01:22:08pm
 பாரத் ஜோடா  யாத்திரையை காங்கிரஸ் கட்சி முழுமையாக நம்பி கொண்டிருக்கின்றது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் இரண்டாவது பாதயாத்திரை நேற்று வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் தவுபல் நகரில் தொடங்கியது

. இந்த இரண்டாம் கட்ட நடை பயணம் 20 க்கு மேற்பட்ட மாநிலங்களை தழுவி நிகழ்த்தப் பெற இருப்பதால் இந்த யாத்திரை இந்திய கூட்டணிக்கு வரும் பாராளுமன்றத் தேர்தலில் கணிசமான வாக்குகளை அளிக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள் ராகுல் காந்தி கடந்த ஆண்டுசெப்டம்பர் ஏழாம் தேதி கன்னியாகுமரியில் இருந்து தொடங்கி காஷ்மீர் சிறுநகரில் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி தன்னுடைய 150 நாள் பாதயாத்திரையை நிறைவு செய்தார்.

இது தென் தமிழகத்தில் இருந்து தொடங்கி வடக்கு காஷ்மீரில் முடிந்ததை ஒட்டி பல்வேறு மாநிலங்களில் மக்களிடம் காங்கிரஸ் கட்சி மீதான ஒரு எழுச்சி ஏற்பட்டதாக சொல்லப்பட்டது .இதன் விளைவாகவே, சமீபத்தில் நடந்த தென்னிந்திய பகுதியான தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சியினுடைய ஆட்சி உருவாகிற்று அதே போன்று கர்நாடகத்திலும் காங்கிரஸ் கட்சியினுடைய ஆட்சி நிலை நிறுத்தப்பட்டது இதை அடிப்படையாகக் கொண்டு ராகுல் காந்தியின்  இரண்டாவது இந்த யாத்திரை 2024 நடக்க இருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு மிகப்பெரிய ஒரு சவாலாக மாறும் என்று அரசியல் விமர்சனங்கள் ஒரு சிலரின் கருத்தாக இருக்கின்றது வடகிழக்கு மாநிலங்களில் முன்பு இருந்த செல்வாக்கை இந்த பயணம்மீண்டும் கட்டமைக்கும் என்று சொல்லப்படுகின்றது. பல்வேறு தரப்பான மக்களை சந்திப்பதின் மூலமாக பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு பெரிய நெருக்கடியை வரும் பாராளுமன்றத் தேர்தலில் கொடுக்க நினைக்கின்றது காங்கிரஸ் கட்சி இந்திய கூட்டணிஒருங்கிணைப்பாளராக காங்கிரஸ் கட்சியினுடைய தலைவர் மல்லிகா ர்ச்சன கார்கே ஒரு மனதாக தேர்ந்தெடுக்க பட்டதின் காரணமாக... இந்தியா கூட்டணியில் உள்ள 26 கட்சிகளின் வழிகாட்டுதலின் ராஜீவ் காந்தியின்படி  பயணத்தின் காரணமாகவும் இந்திய அரசியலில் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வந்து விடலாம் என்றும் பாரத் ஜோடா நியாய் யாத்திரையை காங்கிரஸ் கட்சி முழுமையாக நம்பி கொண்டிருக்கின்றது..

இது எந்த அளவிற்கு வடகிழக்கு மாநிலங்களில் செல்வாக்கை உருவாக்கும் என்று கணிப்பதற்கு இல்லை மணிப்பூரில் நடந்த மதம் சார்ந்த கலவர பின்னணி பொருளாதார மந்த நிலை என்றெல்லாம் காங்கிரஸ் கட்சி தனது எதிர்ப்பு பிரச்சாரமாக கொண்டாலும் மக்களினுடைய பார்வையில் ஆளுகின்ற பாஜகவிற்கு எந்த விதமான சிக்கலை தரும் என்று சொல்வதற்கு இல்லை.

 பாரத் ஜோடா  யாத்திரையை காங்கிரஸ் கட்சி முழுமையாக நம்பி கொண்டிருக்கின்றது.
 

Tags :

Share via