சுற்றுலா பயணிகள், திரைப்பட படப்பிடிப்புக்கு ஜம்மு காஷ்மீர் சுற்றுலாத்துறை வரவேற்பு

by Editor / 06-09-2021 06:06:07pm
சுற்றுலா பயணிகள், திரைப்பட படப்பிடிப்புக்கு  ஜம்மு காஷ்மீர் சுற்றுலாத்துறை வரவேற்பு

கொரோனா ஊரடங்குக்கு பிறகு சுற்றுலா பயணிகள், திரைப்பட துறையினர், சாகச சுற்றுலா, கோல்ப் விளையாட்டு போன்றவர்களை வரவேற்க ஜம்மு காஷ்மீர் சுற்றுலாத்துறை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சுற்றுலாத்துறை ஊழியர் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டு தயார் நிலையில் உதவ உள்ளனர் என்று இதன் சுற்றுலா விளம்பரம் துணை இயக்குனர் அக்சனுல் ஹக் சிஷ்டி மற்றும் சுற்றுலாத்துறை துணை இயக்குனர் நரேஷ்குமார் ஆகியோர் தெரிவித்தனர்.

ஜம்மு காஷ்மீரில் ஓட்டல், டாக்சி, சுற்றுலா வழிகாட்டி, அரசு நிர்வாகிகள், டாக்சி ஓட்டுநர்கள் கொரோனா தடுப்பு விழிப்புணர்வை கடைப்பிடித்து வருகின்றனர்.

7 வருடமாக கடும் வெள்ளத்தால் மூடப்பட்ட ராயல் கால்ப் மைதானம் மீண்டும் தயாராக உள்ளது. உலக தரத்தில் ஜம்மு தாவி கோல்ப் மைதானம் உருவாகி உள்ளது. இதில் 126 முன்னணி கோல்ப் வீரர்கள் பங்கேற்கும் போட்டியும் நடைபெறும். ஸ்ரீநகர், ஜம்மு விமான நிலையங்களுக்கு பல்வேறு நகரங்களிலிருந்து விமான இணைப்பு உள்ளது என்றார் அவர். கடந்த ஆண்டைப் போலவே, சாகசத்தை விரும்பும் சுற்றுலா பயணிகளிடையே மலையேற்றம் மற்றும் நதியில் வேக படகு சவாரி போன்றவை விருப்பமானதாக உள்ளது, இந்த ஆண்டிலிருந்து ஆய்வுக்காக அரசாங்கம் பல மலையேற்றங்களுக்கு அனுமதி அளித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஜம்மு காஷ்மீரில் முக்கிய சுற்றுலா, மத, பாரம்பரிய, சாகசம், கோல்ப் போன்றவை வருங்கால சுற்றுலா பயணிகளின் விருப்பப் பட்டியலில் உள்ளது. மேலும் பல புதிய இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via