நடுரோட்டில் எரிக்கப்பட்ட சடலம்..
திருவள்ளூர் மாவட்டத்தில் இறந்தவரின் உடலை ஊர்வலமாக எடுத்து வந்து நடுரோட்டில் வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் காக்களூரில் பல தலைமுறையாக வந்த சுடுகாட்டை கையகப்படுத்தி நெடுஞ்சாலைப் பணிகள் நடைபெற்று வருவதால், உயிரிழந்தவரின் உடலை சாலையின் நடுவே வைத்து எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து வந்த காவல் துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
Tags :