ஆர்த்தி ஸ்கேன் மற்றும் மருத்துவமனையில் 4 நாள்களாக நடைபெற்ற வருமான வரித்துறையினர் சோதனை நிறைவு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜன் சென்னையை தலைமை இடமாக கொண்டு ஆர்த்தி ஸ்கேன், லேப்ஸ் என்ற நிறுவனத்தினை நடத்தி வருகிறார்.இந்நிலையில் தமிழகம் முழுவதும் கடந்த 6ந்தேதி முதல் ஆர்த்திஸ்கேன் மையங்கள் உள்ளிட்ட 25இடங்களுக்கு மேல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். கோவில்பட்டி அண்ணாபஸ் நிலையம் அருகேயுள்ள ஆர்த்தி மருத்துவமனை, ஆர்த்திஸ்கேன், உரிமையாளர் வீடு மற்றும் ஆர்த்தி திருமண மண்டபம் என உள்ளிட்ட இடங்களில் 5 குழுக்களாக வருவமான வரித்துறையினர் கடந்த 4 நாட்களாக பகல், இரவு என தொடர்ந்து சோதனை நடத்தி வந்தனர். இதில் சில முதலீடு மற்றும் பண பரிமாற்றம் தொடர்பாக சில ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக கோவிந்தராஜன் மனைவி மருத்துவர் கோமதி, மருத்துவமனை, ஸ்கேன் மைய ஊழியர்கள், திருமண மண்டப ஊழியர்கள் என அனைவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் இன்று மாலையில் சோதனை மற்றும் விசாரணையை நிறைவு செய்து விட்டு வருமான வரித்துறை அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர்.
Tags : Arti scan and completion of 4 days income tax examination conducted at the hospital