கோகுல்ராஜ் கொலை வழக்கு - நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியானது

கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டு நிரூபணமாகியுள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உள்ளிட்டோருக்கு ஆயுள் தண்டனை உறுதி என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு மதுரை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனை உறுதியானது. கோகுல்ராஜ் கொலை வழக்கில் இருந்து 5 பேர் விடுவிக்கப்பட்ட உத்தரவும் சரியே என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. யுவராஜ் வாழ்நாள் முழவதும் சிறையில் இருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.
Tags :