சட்டப்பேரவைத் தேர்தல் 20 நாட்களில் ரூ.1,470 கோடிக்கு மது விற்பனை..?

by Editor / 28-11-2023 11:40:17pm
சட்டப்பேரவைத் தேர்தல் 20 நாட்களில் ரூ.1,470 கோடிக்கு மது விற்பனை..?

தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நாளை மறுநாள் (நவ.30) சட்டமன்ற நடைபெற உள்ளது. மொத்தம் உள்ள 119 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சி தலைவர்கள், தேசிய தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுவந்த நிலையில், இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது. இந்நிலையில், தெலங்கானாவில் கடந்த 20 நாட்களில் ரூ.1,470 கோடிக்கு மது விற்பனையானதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த இரண்டு நாட்கள் மதுக்கடைகள் அங்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

 

Tags : சட்டப்பேரவைத் தேர்தல் 20 நாட்களில் ரூ.1,470 கோடிக்கு மது விற்பனை..?

Share via

More stories

Logo