விமான விபத்து: இந்திய கிரிக்கெட் வீரர்கள் மௌன அஞ்சலி

இங்கிலாந்தில் இருந்தபடி இந்திய கிரிக்கெட் வீரர்கள் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். குஜராத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட விமானம் விபத்தில் சிக்கியதால் 241 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். தற்போது இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டுக்கு டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்காக சென்றுள்ளது. இந்நிலையில், விமான விபத்துக்கு இரங்கல் தெரிவித்து இந்திய கிரிக்கெட் அணி மௌன அஞ்சலி செலுத்தியது. தற்போது இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
Tags :