இந்திய அணி 10 ஓவரில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

by Admin / 26-01-2026 01:55:29am
இந்திய அணி 10 ஓவரில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

இன்று அசாம் கௌகாத்தியில் உள்ள பார்பரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்திய அணிக்கும் நியூசிலாந்துக்கு அணிக்கும் இடையேயான மூன்றாவது டி20போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆடிய நியூஸிலாந்து அணி 20 ஓவர் 9 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்களை எடுத்தது. அடுத்து ஆட வந்த இந்திய அணி 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்கோடு களம் இறங்கியது. தொடரை கைப்பற்ற வேண்டும் என்கிற முனைப்போடு இறங்கிய இந்திய அணி 10 ஓவரில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் 60 பந்துகள் மிச்சம் இருக்கிற நிலையில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி t20 போட்டியை வென்று கோப்பையை கைப்பற்றியுள்ளது. இன்னும் இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன. 

இந்திய அணி 10 ஓவரில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
 
Tags :

Share via