மத்திய அரசு ஊழியர்களுக்கு இடைக்கால போனஸ்

மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த நிதியாண்டுக்கான இடைக்கால போனசுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான உற்பத்தி சாராத போனஸ் அல்லது இடைக்கால போனஸ் குறித்து மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினங்கள் துறை ஒரு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த நிதி யாண்டுக்கான இடைக்கால போனஸ் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 31-ந் தேதிப்படி பணியில் இருந்தவர்கள், கடந்த நிதியாண்டில் குறைந்தபட்சம் 6 மாதங்கள் தொடர்ந்து பணியில் இருந்தவர்கள் ஆகியோருக்கு இடைக்கால போனஸ் வழங்கப்படும். குரூப் சி ஊழியர்கள், அரசிதழ் பதிவு பெறாத குரூப் பி ஊழியர்கள் ஆகியோருக்கு போனஸ் வழங்கப்படும். மத்திய துணை ராணுவ படை ஊழியர்கள், முப்படைகளின் ஊழியர்கள் ஆகியோரும் இதைப்பெற தகுதியுடையவர்கள் ஆவர். போனஸ் கணக்கிடுவதற்கான சம்பள உச்சவரம்பு ரூ.7 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Tags :