கொடுங்கையூர் குப்பை எரிஉலை திட்டத்தை கைவிட வேண்டும்: அன்புமணி

by Staff / 28-02-2024 12:34:47pm
கொடுங்கையூர் குப்பை எரிஉலை திட்டத்தை கைவிட வேண்டும்: அன்புமணி

பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் புதிதாக சேரும் குப்பையை எரித்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை ரூ. 1026 கோடியில் செயல்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இந்த குப்பை எரிஉலையில் பிளாஸ்டிக் உள்ளிட்ட அனைத்து குப்பையும் ஒன்றாக எரிக்கப்படும். அதனால், காற்றுமாசு ஏற்படும் மின்சார உற்பத்தி தொழில் நுட்பங்களிலேயே மிகவும் கேடு விளைவிக்கக் கூடியது எரிஉலை தான். எனவே, இந்த எரிஉலை திட்டத்தை மாநகராட்சி முற்றிலுமாக கைவிட வேண்டும். இதற்கு மாற்றாக, சுழிய குப்பை எனப்படும் குப்பையில்லா சென்னை கோட்பாட்டை விரைந்து செயல்படுத்த மாநகராட்சி முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

Tags :

Share via