அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வாஷிங்டனின்புதிய அமைதி வாரியத்தின் கூட்டத்தை தலைமை ஏற்று தொடங்கி வைத்தார்

by Admin / 19-02-2026 08:34:15am
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வாஷிங்டனின்புதிய அமைதி வாரியத்தின் கூட்டத்தை தலைமை ஏற்று தொடங்கி வைத்தார்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வாஷிங்டனின் உள்ள டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அமைதி நிறுவனம் என்ற இடத்தில் புதிய அமைதி வாரியத்தின் கூட்டத்தை தலைமை ஏற்று தொடங்கி வைத்தார். காசா பகுதியில் போர் முடிவுக்கு வந்த பிறகு அங்குள்ள மனிதாபிமான சிக்கல்களை தீர்ப்பது மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்வது மற்றும் சர்வதேச பாதுகாப்பு படையை அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது காசாவின் மறு சீரமைப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளுக்காக உறுப்பு நாடுகள் இடமிருந்து ஐந்து பில்லியன் நிதி உறுதிமொழி பெறப்பட்டுள்ளதாக கிட்டத்தட்ட 41 ஆயிரம் கோடி நிதி. சவுதி அரேபியா ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கத்தார் எகிப்து இந்தோனேசியா மற்றும் துருக்கி உள்பட 20க்கு மேற்பட்ட நாடுகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றன வாடிகள் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் இதில் பங்கேற்கவில்லை. காசாவில் அமைதியை நிலைநாட்ட சர்வதேச பாதுகாப்பு படை அமைக்கப்பட உள்ளது இதில் இந்தோனேசியா சுமார் 8000 வீரர்களை அனுப்ப தயாராக இருப்பதாக உறுதி அளித்துள்ளது இந்த வாரியம் முதலில் காசா மறுசீரமைப்பிற்காக உருவாக்கப்பட்டாலும் உக்கரை உள்ளிட்ட பிற உலகளாவிய மோதல்களையும் கையாளும் வகையில் இது ஆளுமை தன்மை விரிவுபடுத்தப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு குறித்து வரலாற்றிலேயே மிகவும் முக்கியமான சர்வதேச அமைப்பு என்று அமெரிக்க அதிபர் வர்ணித்து உள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வாஷிங்டனின்புதிய அமைதி வாரியத்தின் கூட்டத்தை தலைமை ஏற்று தொடங்கி வைத்தார்
 

Tags :

Share via