தைப்பூசம் பழனியில் பஞ்சாமிர்தத்திற்கு தட்டுப்பாடு

தைப்பூச திருநாளை முன்னிட்டு பழனியில் பஞ்சாமிர்தத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பழனியில் எதிர்பார்த்ததை விட அதிகளவு பக்தர்கள் குவிந்துள்ளதால் பஞ்சாமிர்தம் விரைவாகவே விற்றுத் தீர்ந்து விட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, மலையடிவாரத்தில் உள்ள தனியார் கடைகளில் பக்தர்கள் பஞ்சாமிர்தம் வாங்கும் சூழலுக்கு ஆளாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து தேவஸ்தானம் எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை.
Tags :