நீலகிரி மாவட்டத்தில் ஆட்டோ வடிவிலான மினி ஆம்புலன்ஸ் சேவை

by Editor / 08-07-2021 01:06:57pm
நீலகிரி மாவட்டத்தில் ஆட்டோ வடிவிலான மினி ஆம்புலன்ஸ் சேவை

தமிழ்நாட்டில் முதன் முறையாக ஆட்டோ வடிவிலான மினி ஆம்புலன்ஸ் சேவையை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வனத்துறை அமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்தார். 

நீலகிரி மாவட்டத்தில் தனியார் அமைப்புகள் ஒன்றிணைந்து பல்வேறு நிறுவனங்களின் பங்களிப்புடன் புதிய நவீன கருவிகளுடன் கூடிய 6 ஆட்டோ மினி ஆம்புலன்ஸ்கள் ராதிகா சாஸ்திரி என்னும் தன்னார்வலர் பொதுமக்களின் சேவைக்காக அர்பணித்தார். இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் இந்த சேவையை பாராட்டி  கொடியசைத்து துவக்கி வைத்தார். இதுகுறித்து தெரிவித்த வனத்துறை அமைச்சர் நீலகிரி மாவட்டமானது மலை மாவட்டம் என்பதால் சாலை விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில் இதன் தேவை அதிகரித்துள்ளது எனவும், இதேபோல் பல்வேறு தன்னார்லர்கள் அமைப்புகள் தமிழக அரசுடன் இணைந்து உதவிகள் செய்வதற்கு முன் வரவேண்டும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் சுற்றுசூழல் மாசுபடுவதை தடுப்பதற்கு தமிழகம் முழுவதும் இரண்டரை கோடி மதிப்பில் மரகன்றுகளை நடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதனைதொடர்ந்து கொரோனா பேரிடர் காலத்தில் பொதுமக்களுக்கு சேவைகள் செய்த நபர்களுக்கு காப்பீடு திட்டம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, உதவி ஆட்சியர் தீபனா விஷ் வேஸ்வரி, நகராட்சி ஆணையாளர் பாலமுருகன், தன்னார்வலர் ஜெபரத்தினம் உட்பட பல்வேறு தனியார் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

 

Tags :

Share via