அன்பு என்பது நம்பிக்கைளின் பொக்கிஷத்துக்குள் புதைந்திருப்பது
ஒருவர் நம்மை நம்பி ஒரு உண்மையை அல்லது உணர்வுகளை கண்ணீரோடு சொல்கிறார்கள் என்றால் அநத இடத்தில் தெய்வத்தை விட மேலாக நம் உறவை உணர்கிறார்கள் என்று அர்த்தம்.
அந்த இடத்தை பின்னர் அவர்களோடு பேசாத நிலை வந்தால் கூட காப்பாற்றி அந்த உண்மைகளை உணர்வுகளை அசிங்கப்படுத்தாது இருப்பது தான் நாம் அவர்கள் நமக்கு தந்த இடத்திற்கு மறுபடி செய்யக் கூடிய பிராயச்சித்தம்.
ஒரு பெண் தன் மென்மையான உணர்வுகளைச் சொல்ல அதை மிகக்கேவலமா பப்ளிக்கில் சொல்லித் தன்னை நியாயப்படுத்தும் மிகக்கொடூரமான புத்தி உள்ள எவரும் மனிதப்பிறப்பே இல்லை.
அருவருப்பான மனிதர்கள் தங்களை அழகுபடுத்துவதாய் நினைத்து அசிங்கங்களை அள்ளி முகத்தில் பூசிக்கொள்கிறார்கள்.
ஒருவரின் நம்பிக்கையை காப்பாற்ற முடியாத யாரும் இன்னுமொருவரின் இரகசியங்களையோ அவர்களின் மன உணர்வுகளையோ கண்ணீரையோ நெருங்கித் தொடாமல் இருந்து விடுங்கள்.
தங்கள் இலாபத்திற்காகவோ மதிக்கப்படுதலுக்காகவோ இன்னுமொருவரின் மெல்லிய உணர்வுகளை வெட்டிக் கீறிப் போடும் வக்கிரம் உள்ளவர்கள் மனித இனத்துக்கே இழுக்கு.
கேவலம் ஒருமுறை பிறந்து மடியும் மனதப்பிறவி நாம்.
நம்மை நம்பி யாரோ அழுகிறார்கள்.தங்கள் உணர்வுகளைப் பகிர்கிறார்கள் என்றால் நாமும் அவர்கள் மனதில் உயர்ந்த இடத்தில் இருக்கிறோம் எனப் புரிந்து நடப்பதே ஆகக்குறைந்த மனிதத்துவம்.
இன்னுமொருவர் கண்ணீரைத் துடைத்து தோள் கொடுக்கும் உண்மைத்துவம் இல்லாத யாரும் இந்த உலகில் அன்பில்லை மனிதர்கள் மனிதத்தோடு இல்லை என்று புலம்பாமலே இருந்து விடுங்கள்.
நாளை உங்கள் குழந்தைகளும் தங்கள் கவலைகளை சொல்லவோ கண்ணீரைக் காட்டவோ உங்கள் முன் வர மாட்டார்கள்.
நட்பு எத்தனை புனிதமோ
தாய்மை எத்தனை தனித்துவமோ அதுபோல அடுத்தவர் நம்மை நம்பி விடும் கண்ணீரும்
நம்மிடம் பகிரும் வலிகளும் புனிதமானது.
அவர்களது கண்ணீரை வேதனையை மென்மையான உணர்வுகளை சிரிப்புக்காகவோ ஏளனத்துக்காகவோ இலாபத்துக்காகவோ உபயோகித்து விட்டால் இந்த உலகில் தாயாகக் கூட வாழ்ந்து விடும் தகுதி அவர்களுக்கு இல்லையே.
Tags :