திமுக பிரமுகர் வெட்டி கொல்லப்பட்ட வழக்கில் கைதான இரண்டு பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம்

by Staff / 08-11-2022 12:54:14pm
திமுக பிரமுகர் வெட்டி கொல்லப்பட்ட வழக்கில் கைதான இரண்டு பேர்  மீது குண்டர் தடுப்பு  சட்டம்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் திமுக பிரமுகர் வெட்டி கொல்லப்பட்ட வழக்கில் கைதான இரண்டு பேர்  மீது குண்டர்  தடுப்புச் சட்டம் பாய்ந்து உள்ளது. திமுக பிரமுகர் மோகன் என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் முன் விரோதம் காரணமாக வெட்டிக்கொள்ளப்பட்டார். இந்த வழக்கில் சஞ்சய் விக்கி மற்றும் நித்திஷ்  ஆகியோரை திருத்தணி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சஞ்சய் ஒரு வருடத்திற்கு ஜாமினில் வெளிவர முடியாத பிரிவின் கீழ சிறையில் உள்ள நிலையில் ஆட்சியர்அல்பி  ஜான் வர்கீஸ் உத்தரவின் பேரில் விக்கி மற்றும் நித்திஷ் ஆகியோர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo