என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை

by Editor / 16-06-2026 11:46:16am
என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே இலந்தைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த பிச்சை மகன் சுடலைமுத்து என்ற சுரேஷ் (21), கோவில்பட்டியில் என்ஜினீயரிங் படித்து வந்தார். நேற்று மாலை 6.10 மணியளவில், தனது நண்பர் காளிராஜுக்கு 'என்னுடைய அம்மாவை நல்லா பார்த்துக்கோங்க... சந்தோசமா இருங்க... எல்லாரும் ஹாப்பியா இருங்க...' என்று உருக்கமான மெசேஜ் அனுப்பியுள்ளார். பின்னர், வீட்டிலிருந்த மின்விசிறி கம்பியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

 

Tags :

Share via

More stories

Logo