மெக்சிகோவில் முதல் பெண் அதிபரானார் கிளாடியா ஷீன்பாம்

by Staff / 03-06-2024 03:59:58pm
மெக்சிகோவில் முதல் பெண் அதிபரானார் கிளாடியா ஷீன்பாம்

மெக்சிகோவின் 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபராக கிளாடியா ஷீன்பாம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்னதாக நேற்று (ஜூன் 2) அதிபர், 128 செனட் உறுப்பினர்கள் மற்றும் 500 கீழவை உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் இடதுசாரி கட்சியான மொரேனா கட்சி சார்பில் கிளாடியா ஷீன்பாம் போட்டியிட்டார். தேர்தலில் 58.3 முதல் 60.7 சதவீத வாக்குகளை கிளாடியா ஷீன்பாம் பெற்றுள்ளதாக அந்த நாட்டின் தேசிய தேர்தல் அமைப்பு தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via