ஒருதலையாக காதலித்து வந்த மாணவி மீது கத்தி குத்து- கைது

by Admin / 22-01-2026 06:42:29pm
ஒருதலையாக காதலித்து வந்த மாணவி மீது கத்தி குத்து- கைது

கோயம்புத்தூர் சரவணம்பட்டி பகுதியில் உள்ள கே ஜி தகவல் தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி .டெக் பயிலும் மாலதி மீது அவரோடு பயிலும் மாணவர் ஒருதலையாக காதலித்து வந்ததாகவும் மாணவி அவரது காதலை ஏற்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அவர் கத்தியால் மாணவியை குத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து சக மாணவர்கள் மற்றும் கல்லூரி ஊழியர்கள் மாணவியை மேட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மாலதி தற்பொழுது சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த சரவணம்பட்டி காவல் துறையினர் தப்பி ஓடிய மாணவனை விரைந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

Tags :

Share via