தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தடை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் 

by Editor / 05-11-2024 11:57:59am
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தடை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் 

தமிழ்நாட்டின் பிரபலமான தனியார் தொலைக்காட்சியில் கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும்  "பிக் பாஸ்" நிகழ்ச்சியை தடை செய்யவேண்டும், இரட்டை அர்த்தம் தரக்கூடிய ஆபாசமான சொற்களைப் பயன்படுத்தும் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வலியுறுத்தியும்,பெரிய திரைக்கு உள்ளது போன்று சின்ன திரைக்கும் தணிக்கை (Censor ) முறையினை அமல்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு  கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக, ஆர்ப்பாட்டம்  நடத்தினர் பின்னர் கோட்டாட்சியர் மகாலட்சுமிடம் மனு அளித்தனர்,இந்த ஆர்ப்பாட்டத்தில்கோக்கும் மேற்பட்ட ஆண்களும் ,பெண்களும் பங்கேற்றனர்.

 

Tags : தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தடை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் 

Share via

More stories

Logo