3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

by Staff / 25-05-2024 02:16:18pm
3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று (மே 25) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலவி வரும் ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. இந்த புயலானது நாளை (மே 26) மேற்குவங்கம், வங்கதேசம் இடையே நள்ளிரவில் கரையைக் கடக்கும் எனவும் 
கணிக்கப்பட்டுள்ளது.அதே போல், பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Tags :

Share via